நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கூட்டணி நிர்வாகத்தில் மாற்றங்கள்; சனுசி தேர்தல் தலைமை இயக்குநராக நியமனம்: அஸ்மின் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம்

கோலாலம்பூர்:

தேசியக் கூட்டணி நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் சம்சுரி மொக்தார் தெரிவித்தார்.

ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்கு தயாராகும் வகையில், தேசியக் கூட்டணி நிர்வாகம் உடனடியாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
தேசியக் கூட்டணியின் சட்ட விதிகளுக்கு கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பின் மூலம், பெர்சத்துவின் உதவித் தலைவர் டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி முகமது ஜிடின், தேர்தல் தலைமை இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்.

அவருக்குப் பதிலாக கெடாவின் மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நூர் நியமிக்கப்பட்டார்.

அதே நேரத்தில், முகமது சனுசி பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அப்பதவியை மலேசிய இந்திய மக்கள் கட்சியின் துணைத் தலைவர் எஸ். சுப்பிரமணியம் ஏற்றார்.

மேலும், தேசியக் கூட்டணியின் சட்டவிதிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பெர்சத்துவின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி, துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்று இரவு பாஸ் தலைமையகத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

மேலும் தேசியக் கூட்டணி அமைப்பை வலுப்படுத்துவதற்காக உச்ச மன்றத்தின் அவசரக் கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset