செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பெல்ஜியம் - எகிப்து சமநிலை
வாஷிங்டன்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பெல்ஜியம் - எகிப்து அணிகள் இடையிலான ஆட்டமும் சமநிலையில் முடிந்தது.
இன்றைய ஆட்டத்தில் ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள பெல்ஜியம், எகிப்து அணிகள் மோதின.
சியாட்டில் அரங்கில் இந்தப் போட்டி நடந்தது. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர்.
இதில் எகிப்து அணி முதலில் ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 20ஆவது நிமிடத்தில் எகிப்து அணியின் சலாஹ் வழங்கிய பந்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட எமாம் அஷௌர் கோல் அடிக்க அந்த அணி முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதி வரை பெல்ஜியம் அணி கோல் அடிக்கும் முயற்சி அந்த அணிக்கு பலன்தரவில்லை.
பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது பாதியில் பெல்ஜியம் அணி அடுத்தடுத்து மூன்று வீரர்களை மாற்றியது.
மாற்று வீரர்களின் ஆட்டம் பெல்ஜியம் அணிக்கு பலன் கொடுத்தது.
ஆட்டத்தின் 66ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் முகமது ஹானி கோல் அடிக்க இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை அடைந்தன.
கடுமையான போராட்டத்திற்கு பின் போட்டி சமநிலை ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 16, 2026, 9:47 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சவூதி அரேபியாவிடம் தப்பியது உருகுவே
June 16, 2026, 7:46 am
உலகக் கிண்ண போட்டியில் முதல் அதிர்ச்சி: ஸ்பெயினை அலறவிட்டது கேப் வெர்டே
June 15, 2026, 4:24 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: அபாரமாக ஆடி துனிசியாவை சுவீடன் வென்றது
June 15, 2026, 12:58 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 5-1 என்ற கணக்கில் துனிசியாவை வீழ்த்திய ஸ்வீடன்
June 15, 2026, 12:20 pm
ஏலத்திற்கு வரும் உலகக் கிண்ணப் போட்டி நினைவுப் பொருள்கள்
June 15, 2026, 9:28 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நெதர்லாந்து - ஜப்பான் சமநிலை
June 15, 2026, 9:25 am
