நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண போட்டியில் முதல் அதிர்ச்சி: ஸ்பெயினை அலறவிட்டது கேப் வெர்டே

ஜியோர்ஜியா:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியை  கேப் வெர்டே அணியினர் அலறவிட்டனர்.

உலகக் கிண்ண கால்பந்தில் நேற்றிரவு அட்லாண்டாவில் நடந்த எச் பிரிவு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், அறிமுக அணியான கேப் வெர்டேவை எதிர்கொண்டது.

அனுபவம் இல்லாத அணி என்ற போதிலும் கேப் வெர்டே ஸ்பெயினின் சவாலுக்கு ஈடுகொடுத்து ஆடியது.

முதல் பாதியில் ஸ்பெயின் வீரர்கள் பெட்ரி உள்ளிட்டோர் இலக்கை நோக்கி அடித்த 4 ஷாட்டுகளையும் கேப்வெர்டே கோல்காவலர் வோசின்யா அதிரடியாக தடுத்தார்.

பிற்பாதியிலும் ஸ்பெயின் வீரர்களால் கேப்வெர்டேவின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை.

71ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக இளம் புயல் லெமின் யமாலை கொண்டு வந்தும் நிலைமை மாற்ற முடியவில்லை.

இறுதியில் ஆட்டம் கோல் இன்றி சமநிலை ஆனது.

நடப்பு போட்டியில் ஒரு கோல் கூட அடிக்கப்படாத ஆட்டம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset