நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: அபாரமாக ஆடி துனிசியாவை சுவீடன் வென்றது

அர்லிங்டோன்:

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் துனிசியாவை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சுவீடன் பந்தாடியது.

ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் சுவீடனின் யாசின் அயாரி (Yasin Ayari) முதல் கோலைப் புகுத்தினார்.

30ஆவது நிமிடத்தில் சுவீடன் இரண்டாம் கோலைப் புகுத்தியது.

சற்றும் எதிர்பாராமல் இடைவேளைக்கு முன்பு துனிசியாவின் ஓமார் ரெக்கிக் (Omar Rekik) தனது அணிக்கு முதல் கோலைப் போட்டார். பிறகு ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

அதன்பிறகு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்த சுவீடன் அணி அடுத்தடுத்த கோல்களை புகுத்தி அபாரமாக வென்றது. 

இறுதியில் ஐந்துக்கு ஒன்று வெற்றிபெற்று ரசிகர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது சுவீடன்.

கடைசியாக 2018ஆம் ஆண்டு சுவீடன் உலகக் கிண்ணப் போட்டியில் காலிறுதிச் சுற்று வரை சென்றது.

இந்த முறை எந்த அளவுக்குச் செல்லும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

துனிசியாவைப் பொறுத்தவரை உலகக் கிண்ண ஆட்டத்தை வென்ற முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமை அதற்கு உண்டு. 1978ஆம் ஆண்டு அது மெக்சிகோ அணியை வீழ்த்தி அந்தப் பெருமையைப் பெற்றது.

ஆனால் துனிசியா அணி இதுவரை குழு நிலைச் சுற்றைத் தாண்டி முன்னேறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset