செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சவூதி அரேபியாவிடம் தப்பியது உருகுவே
புளோரிடா:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் கடைசி கட்ட கோலால் சவூதி அரேபியாவிடம் உருகுவே அணி தப்பித்துள்ளது.
இன்று எச் பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் சவூதி அரேபியா, உருகுவே அணிகள் மியாமியில் மோதின.
போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், கோல் அடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
முதல் பாதி கோல் இன்றி முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 41ஆவது நிமிடத்தில் சவூதி அரேபியாவின் அப்துல்லா அல்-அம்ரி கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார்.
பின்னடைவை சந்தித்த உருகுவே அணி இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்தது.
தொடர்ந்து அழுத்தம் கொடுத்த அந்த அணிக்கு 80ஆவது நிமிடத்தில் சமநிலை கிடைத்தது.
மாக்ஸி அரௌஜோ அடித்த கோலின் மூலம் உருகுவே 1-1 என சமநிலை செய்தது.
இறுதிக்கட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்கான கோலை தேடி தீவிரமாக முயற்சித்தன.
ஆனால் ஆட்ட நேர முடிவில் சவூதி அரேபியா - உருகுவே ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஆனது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 16, 2026, 7:47 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பெல்ஜியம் - எகிப்து சமநிலை
June 16, 2026, 7:46 am
உலகக் கிண்ண போட்டியில் முதல் அதிர்ச்சி: ஸ்பெயினை அலறவிட்டது கேப் வெர்டே
June 15, 2026, 4:24 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: அபாரமாக ஆடி துனிசியாவை சுவீடன் வென்றது
June 15, 2026, 12:58 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 5-1 என்ற கணக்கில் துனிசியாவை வீழ்த்திய ஸ்வீடன்
June 15, 2026, 12:20 pm
ஏலத்திற்கு வரும் உலகக் கிண்ணப் போட்டி நினைவுப் பொருள்கள்
June 15, 2026, 9:28 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நெதர்லாந்து - ஜப்பான் சமநிலை
June 15, 2026, 9:25 am
