செய்திகள் விளையாட்டு
பேரா தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான கால்பந்து போட்டி: பத்தாக் ரேபிட், கேசூட் தோட்ட தமிழ்ப்பள்ளிகள் வகை சூடின
ஈப்போ:
பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான கால்பந்து போட்டியில் பத்தாக் ரேபிட், கேசூட் தோட்ட தமிழ்ப்பள்ளிகள் வகை சூடின.
பேரா மாநில அரசாங்க ஆதரவுடன் பேரா மாநில இந்தியர் கால்பந்து சங்கம் இப்போட்டியை ஏற்று நடத்தியது்.
18ஆவது முறையாக நடைபெற்ற இப்போட்டி ஈப்போவில் ஈப்போ பாடாங்கில் நடைபெற்றது.
இப்போட்டியின் ஆண்கள் பிரிவில் பத்தாக் ரேபிட் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.
இப்பிரிவில் இரண்டாவது இடத்தை நோவஸ் கோஷியா 2 தமிழ்ப்பள்ளி,
மூன்றாம் இடத்தை செட்டியார் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.
பெண்கள் பிரிவில் கேசூட் தோட்ட தமிழ்ப்பள்ளி முதல் நிலையில் வெற்றி பெற்றது. இரண்டாம் இடத்தை ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியும் மூன்றாம் இடத்தை சங்காட் தமிழ்ப்பள்ளி வாகை சூடின.
முன்னதாக இப் போட்டியை பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தொடக்கி வைத்தார்.
பேரா இந்தியர் கால் பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.
மாநிலம் முழுவதிலுமிலிருந்து 28 அணிகள் பங்கேற்றன.
அவற்றில் ஆண்கள் பிரிவில் 19 அணிகளும், பெண்கள் பிரிவில் 9 அணிகளும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியில் அடுத்தாண்டு மேலும் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்ப்பதாக போட்டி விளையாட்டுக் குழுத் தலை வரதராஜு மாரிமுத்து கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2026, 12:58 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 5-1 என்ற கணக்கில் துனிசியாவை வீழ்த்திய ஸ்வீடன்
June 15, 2026, 12:20 pm
ஏலத்திற்கு வரும் உலகக் கிண்ணப் போட்டி நினைவுப் பொருள்கள்
June 15, 2026, 9:28 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நெதர்லாந்து - ஜப்பான் சமநிலை
June 15, 2026, 9:25 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஜெர்மனி கோல் மழை
June 14, 2026, 7:19 pm
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி: ஆஸ்திரேலியாவிடம் தோற்றது துருக்கியே
June 14, 2026, 11:52 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 36 ஆண்டுகளில் முதல்முறையாக வென்ற ஸ்காட்லாந்து
June 14, 2026, 10:50 am
