செய்திகள் மலேசியா
7-ஆவது மாடியிலிருந்து லிஃப்ட் சரிந்து விபத்து: பராமரிப்பு பணியில் ஈடுபட்ட இரு தொழிலாளர்கள் படுகாயம்
மலாக்கா:
ஹோட்டல் ஒன்றில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்த லிஃப்ட் திடீரென 7-ஆவது மாடியிலிருந்து சரிந்து விழுந்ததில், அதில் பணியாற்றிக் கொண்டிருந்த இரு இந்திய தொழிலாளர்கள் கடுமையாகக் காயமடைந்தனர்.
இன்று காலை இடம்பெற்ற இந்த அதிர்ச்சி சம்பவத்தில், 27 வயதுடைய இரு தொழிலாளர்களும் லிஃப்ட் அமைப்பின் உள்ளே சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் விரைந்த மலாக்கா தீயணைப்பு, மீட்புப் படையினர், தீவிர மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
பின்னர் காயமடைந்த தொழிலாளர்கள் மலேசிய சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து நிகழ்ந்தபோது, இருவரும் 7-வது மாடியில் இருந்த லிஃப்டின் மேற்பகுதியில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, விபத்திற்கான உண்மையான காரணம், காயமடைந்தோரின் உடல்நிலை தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
