நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குண்டுவெடிப்பில் உயிரிழந்த 2 இராணுவ வீரர்கள் குறித்து முழுமையான விசாரணைக்கு மாமன்னர் உத்தரவு

கோலாலம்பூர்:

குண்டுவெடிப்பில் உயிரிழந்த 2 இராணுவ வீரர்கள் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

கெடாவின் குருனில் உள்ள ஹோபார்ட் முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடிப்பில் சிக்கி  இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
மரணமடைந்த அவர்களின் குடும்பங்களுக்கு மாமன்னர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து வரும் கடினமான காலங்களை எதிர்கொள்ள, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மனவுறுதியும் வலிமையும் கிடைக்கும் என அவர் நம்புகிறார்.

மேலும் மலேசிய ஆயுதப் படையிம் உச்ச தளபதியான மாமன்னர்,

இந்தச் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய ஒரு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக, ஒவ்வொரு இராணுவப் பயிற்சி, நடவடிக்கையிலும் பாதுகாப்பு அம்சத்திற்கு எப்போதும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் மாமன்னர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்





தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset