நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உயர் கல்வி மாணவர் கைது; 1.17 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்: போலிஸ்

அலோர்ஸ்டார்:

1.17 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் உயர் கல்வி மாணவர் ஒருவர் கைது செய்யபட்டார்.

கெடா மாநில போலிஸ்படையின் துணைத் தலைவர் பட்ருல்ஹிஷாம் பஹாருடின் இதனை தெரிவித்தார்.

கடந்த புக்கிட் காயு ஹீத்தாம் குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல், பாதுகாப்பு வளாகத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, ​​1.17 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ளதாக மதிப்பிடப்பட்ட 14.63 கிலோ கஞ்சா பூக்களை போலிசார் பறிமுதல் செய்தது.

இந்த சோதனையின் போது, ​​கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் உயர் கல்வி நிறுவனத்தில் மாணவராக இருக்கும் 24 வயது உள்ளூர் இளைஞர் ஒருவரும் கைது செய்தனர்.

சந்தேக நபரின் குடும்பத்திற்குச் சொந்தமான நான்கு சக்கர வாகனத்தை சோதனையிட்டபோது, ​​அதன் பின் இருக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, கஞ்சா பூக்கள் என சந்தேகிக்கப்படும் 13 கருப்பு பிளாஸ்டிக் பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு 1.17 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

இந்தப் போதைப்பொருட்கள் சுமார் 73,150 போதை அடிமைகளுக்கு விநியோகிக்கப்படும் திறன் கொண்டவை.

வெற்றிகரமாக சந்தைப்படுத்தப்பட்டால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்று அவர் நேற்று கெடா போலிஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

அண்டை நாடுகளில் இருந்து போதைப்பொருட்களைக் கொண்டு வந்து கோலாலம்பூர், ஜொகூர் சந்தைகளுக்கு அனுப்பும் ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு, சந்தேக நபர் ஒரு கூரியராகச் செயல்பட்டு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset