செய்திகள் மலேசியா
பாஸ் கட்சியை அனைத்து முனைகளிலும் எதிர்கொள்ள பெர்சத்து தயாராக உள்ளது: மொஹைதின்
பெட்டாலிங்ஜெயா:
சமீபத்தில் தங்களுடனான உறவைத் துண்டித்துக்கொண்ட பாஸ் கட்சியை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தங்கள் பெர்சத்து தயாராக உள்ளது.
பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை கூறினார்.
இரு கட்சிகளும் தனித்தனியாகப் பிரிந்து செல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா என கேட்கப்பட்டபோது, அவர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டால், நாங்கள் அனைத்து முனைகளிலும் போராடத் தயாராக இருக்கிறோம்.
நேற்று இரவு கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பெர்சத்து உச்ச தலைமை மன்ற கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் டான்ஸ்ரீ மொஹைதின் இவ்வாறு கூறினார்.
வரவிருக்கும் ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சத்து தேசியக் கூட்டணி சின்னத்தின் கீழ் போட்டியிடும்.
நாங்கள் இந்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம், ஏனெனில் நாங்கள் தேசியக் கூட்டணி நிறுவனர்களில் ஒருவராக இருக்கிறோம்.
முன்னதாக, கூட்டணிக்கு ஒரு வலுவான அடையாளம் இருப்பதால், பெர்சத்து தேசியக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும் என்று அவர் கூறியிருந்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
