செய்திகள் மலேசியா
பெர்சத்து தேசியக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும்: டான்ஸ்ரீ மொஹைதின்
கோலாலம்பூர்:
பாஸ் கட்சியுடனான பிளவு இருந்தபோதிலும், தேசியக் கூட்டணியில் நீடிப்பதே தனது நிலைப்பாடு என்று பெர்சத்து மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தேசியக் கூட்டணியைத் தொடங்கியதே பெர்சத்துதான். இதனால் கூட்டணியின் சின்னத்தின் கீழ் பெர்சத்து தேர்தலில் போட்டியிடும்.
இந்த நிலைப்பாட்டில் பெர்சத்து உறுதியாக இருப்பதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் கூறினார்.
நேற்று இரவு பெர்சத்துவின் உயர்மட்டத் தலைமைக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், தேசியக் கூட்டணி ஒரு நல்ல அடையாளம், நாங்கள் தொடர்ந்து அதில் நீடிப்போம் என்று அவர் வலியுறுத்தினார்.
பதவி நீக்கம் என்ற விஷயத்திற்கு ஒருமித்த கருத்து தேவை.
அது ஒரு கட்சி மட்டும் சார்ந்ததாக இருக்க முடியாது. அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
