செய்திகள் இந்தியா
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
புது டெல்லி:
டெல்லியின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்' விடுத்திருந்த நிலையில், அங்கு கடுமையான புழுதிப்புயல் வீசியது.
தலைநகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 60-80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பாலம் மற்றும் துவாரகா பகுதிகளில் நேற்று பிற்பகல் 2:30 மணி நிலவரப்படி, மணிக்கு 92 கி.மீ. வேகம் வரை காற்று வீசியது.
நேற்று காலையிலும் டெல்லியில் லேசான மழை பெய்தது. இமயமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் மேற்கத்திய இடையூறு காரணமாக இந்த மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.

எனினும், இந்த அமைப்பின் தாக்கம் குறையத் தொடங்குவதால், தலைநகரில் செவ்வாய்க்கிழமை முதல் படிப்படியாக வெப்பநிலை உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, டெல்லியின் பல இடங்களில் இடி, மின்னலுடன்லேசான மழை பெய்யக்கூடும் என ‘ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டிருந்தது. டெல்லியை ஒட்டியுள்ள ஃபதேஹாபாத், ஜிந்த், சோனிபட், ரோஹ்தக் உள்ளிட்ட பகுதிகளிலும் புழுதிப்புயலைத் தொடர்ந்து லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
