செய்திகள் இந்தியா
2030-ல் அஹமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான கொடி இந்தியாவிடம் ஒப்படைப்பு
கிளாஸ்கோ:
23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் கடந்த மாதம் 23-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.
74 நாடுகளைச் சேர்ந்த 2,729 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இந்தத் தொடரில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என 39 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடம் பிடித்தது. ஆஸ்திரேலியா 70 தங்கம், 45 வெள்ளி, 56 வெண்கலத்துடன் 171 பதக்கங்கள் குவித்து முதலிடம் பிடித்தது.
இங்கிலாந்து 29 தங்கம், 45 வெள்ளி, 36 வெண்கலத்துடன் 110 பதக்கங்களுடன் 2-வது இடமும், கனடா 19 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலத்துடன் 62 பதங்கங்கள் பெற்று 3-வது இடமும் பிடித்தன.
இந்தத் தொடரில் மொத்தம் 10 விளையாட்டுகளில் 215 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவு விழா மலேசிய நேரப்படி நேற்று அதிகாலை ஓவோ ஹைட்ரோ அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட எடின்பர்க் பிரபு இளவரசர் எட்வர்ட், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நிறைவு விழாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஜோதியானது வரும் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
