செய்திகள் இந்தியா
அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழப்பு 75-ஆக அதிகரிப்பு
கௌஹாத்தி:
அஸ்ஸாம் வெள்ளத்தில் சிக்கி மேலும் 7 போ் உயிரிழந்த நிலையில், அங்கு வெள்ளத்தால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 75-ஆக அதிகரித்துள்ளது.
அங்குள்ள சிவசாகா், சராய்தேவ், கோலாகாட், ஜோா்ஹாட், நகான், சோனித்பூா், காம்ரூப் மாவட்டங்கள் வெள்ளத்தால் தொடா்ந்து பாதிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 3.32 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சராய்தேவ் மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
சிவசாகா் மாவட்டத்தில் உள்ள நஸ்ரியா வருவாய் வட்டத்தில், வெள்ளம் காரணமாக 7 போ் உயிரிழந்தனா். இதையடுத்து அந்த மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75-ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கான இழப்பீட்டை தலா ரூ.9 லட்சமாக மாநில அரசு அதிகரித்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 7, 2026, 11:50 am
விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயற்சி செய்த கேராளவைச் சேர்ந்த நபர் கைது
August 7, 2026, 9:51 am
பாலியல் பலாத்கார வழக்கில் தெஹெல்கா நிறுவனர் குற்றவாளி எனத் தீர்ப்பு: பத்தாண்டு சிறை
August 4, 2026, 5:55 pm
பிரசாந்த் கிஷோர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்
August 4, 2026, 12:20 pm
2030-ல் அஹமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான கொடி இந்தியாவிடம் ஒப்படைப்பு
August 3, 2026, 6:23 pm
வங்கிக் கணக்கில் ரூ. 100 கோடி: எரிவாயு மானியம் சரிபார்த்த பெண் அதிர்ச்சி
August 3, 2026, 6:17 pm
கேரளத்தில் திடீர் நிலச்சரிவு: மக்கள் நூலிழையில் உயிர் தப்பினர்
August 2, 2026, 11:22 am
கேரளாவில் கடும்கனமழையில் 6 பேர் உயிரிழந்தனர்; பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
July 29, 2026, 10:47 pm
