செய்திகள் இந்தியா
இந்தியாவில் முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா் ஒப்புக்கொண்டார்
புதுடெல்லி:
இந்தியாவில் முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்கள் கட்டணம், சாதாரண ரயில்களில் உள்ள கட்டணத்தை விட அதிகம் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புக்கொண்டுள்ளார்.
சாதாரண முன்பதிவில்லாத 2-ம் வகுப்பு பெட்டிகள் கொண்ட ரயில்களில் பெறப்படும் கட்டணம்தான், முன்பதிவில்லாத 2-ம் வகுப்பு பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்களிலும் வசூலிக்கப்படுகிறது. அதேநேரத்தில் முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில், சாதாரண ரயில்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட அதிகம் பெறப்படுகிறது.
ரயில் பயணிகளுக்கு சலுகையாக, 2024-25ஆம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்காக ரூ.60,239 கோடி மத்திய அரசு மானியங்கள் வழங்கியுள்ளது என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.
ரயில்களில் கட்டணம் நிா்ணயிக்கப்படும் முறைகள் குறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. சஞ்சனா ஜாதவ் எழுப்பிய கேள்விக்கு, அஸ்வினி வைஷ்ணவ் இவ்வாறு பதிலளித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
