செய்திகள் இந்தியா
பிரசாந்த் கிஷோர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்
பாட்னா:
பீகாரில் பிரபல தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி நிறுவனருமான பிரஷாந்த் கிஷோர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றிருப்பதுதான் இந்தியாவின் தற்போதைய தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸும் குஜராத்தில் பாஜகவும் வெற்றிபெற்ற நிலையில், பீகாரில் பிரபல தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி நிறுவனருமான பிரஷாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து, இந்தியாவில் அரசியல் முக்கியத்துவமிக்க மாநிலங்களில் ஒன்றான பீகாரில், பிரசாந்த் கிஷோரின் கைஓங்குகிறதா என்ற கேள்வியை பங்கிபூர் தேர்தல் முடிவுகள் எழுப்பியுள்ளன. இத்தொகுதி பாட்னா மேற்கு என்ற பெயரில் இருந்தபோதும் பின்னர் பங்கிபூர் என பெயர் மாற்றம் கண்டபின்னரும் தொடர்ந்து 9 முறை பாஜக வென்றுள்ளது.
இதில் பாஜகவின் தேசியத் தலைவரான நிதின் நபினின் மறைந்த தந்தை 4 முறையும் நிதின்நபின் 5 முறையும் வெற்றிபெற்றுள்ளனர். இத்தகைய வரலாற்றுமிக்க பாஜகவின் கோட்டையில்தான் இன்று பிரசாந்த் கிஷோர் பெரிய வெற்றியை, அதுவும் தாம் களம் கண்ட முதல் தேர்தலிலேயே பதிவு செய்துள்ளார். மேலும் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக பீகார் முதல்வராக எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே அக்கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.
10 முறை முதல்வர் நிதிஷ் குமார் பீகாரில் தீவிர அரசியலில் இருந்து நகர்ந்தபின் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே அவரது தரப்பு தோற்றுள்ளதும் கவனம் பெறுகிறது. இம்முடிவு, பீகார் அரசியலின் கணக்குகளை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
