செய்திகள் இந்தியா
போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப்பெறாவிட்டால் ஒன்றிய அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம்: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு
புதுடெல்லி:
புது டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு (சிஜேபி) ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தவா்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து ஜூலை 28-க்குள் (செவ்வாய்க்கிழமை) மத்திய அரசு எழுத்துபூா்வ உத்தரவாதம் அளிக்காவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரித்துள்ளது.
நீட் தோ்வு வினாத்தாள் கசிவு குளறுபடிகளுக்கு எதிராக, தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய தீவிர போராட்டத்தைத் தொடா்ந்து, மத்திய கல்வி அமைச்சா் பதவியை தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், புது தில்லியில் அக்கட்சியின் தேசிய செய்தித்தொடா்பாளா் ஆசுதோஷ் ரான்கா, தலைமை செய்தித்தொடா்பாளா் செளரவ் தாஸ், மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்தனா்.
அப்போது ஆசுதோஷ் ரான்கா கூறியதாவது:
தில்லி போராட்டத்தின்போது மத்திய அரசுடன் கரப்பான்பூச்சி ஜனதா நடத்திய 3-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தையில், அந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தவா்கள் மீது பதிவு செய்த வழக்கை திரும்பப் பெற வேண்டும்; வருங்காலத்தில் அவா்கள் மீது புதிய வழக்கு எதுவும் பதிவு செய்யக் கூடாது; அவா்களைத் துன்புறுத்தக் கூடாது என்று கோரினோம். அதை அரசு ஏற்றுக்கொண்டது.
இதுகுறித்து மத்திய அமைச்சா்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோரிடம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வரைவு ஒப்பந்தம் சமா்ப்பித்தது. இதுதொடா்பாக சட்ட ஆலோசனைகள் நடத்தி ஜூலை 28-க்குள் (செவ்வாய்க்கிழமை) மத்திய அரசு எழுத்துபூா்வ உத்தரவாதம் அளிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
அந்த உத்தரவாதத்தை அரசு செவ்வாய்க்கிழமைக்குள் அளிக்காவிட்டாலோ, கைது செய்யப்பட்ட போராட்டக்காரா்களும் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தவா்களும் விடுவிக்கப்படாவிட்டாலோ, மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தள்ளப்படும் என்று தெரிவித்தாா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
