செய்திகள் இந்தியா
கேரளாவில் கடும்கனமழையில் 6 பேர் உயிரிழந்தனர்; பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
திருவனந்தபுரம்:
கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரளாவில் கனமழையால் நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவின் பல மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் நிலச்சரிவுகள், வெள்ளப் பெருக்கு, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், கேரளாவின் 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மிக அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய 9 மாவட்டங்களில் மிக அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
