செய்திகள் இந்தியா
‘வந்தே மாதரம் பாடலை எவரேனும் அவமதித்தால் அவருக்கு 3 ஆண்டு சிறை’ : மசோதா நிறைவேற்றம்
புதுடெல்லி:
வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
தற்போதுள்ள, ‘தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971’-ஐ, திருத்துவதற்கான இந்த மசோதாவை, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தாக்கல் செய்தார்.
‘தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026’-ன் படி, தேசியப் பாடலான ‘வந்தே மாதர’-த்தை பாடும் கூட்டத்தை வேண்டுமென்றே தடுப்பதாகவோ அல்லது இடையூறு விளைவிப்பதாகவோ கண்டறியப்படும் எவருக்கும் மூன்றாண்டு சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்.
1971ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின்படி’, தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலை பாடுவதை வேண்டுமென்றே தடுப்பதற்கோ அல்லது அதைப் பாடும் கூட்டத்துக்கு இடையூறு விளைவிப்பதற்கோ தண்டனை வழங்க வழி வகுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தேசியப் பாடலான ‘வந்தே மாதர’-த்துக்கு அத்தகைய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், தேசிய பாடலுக்கும் அதேபோன்ற பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
“தற்போது தேசியப் பாடலாகக் கவுரவிக்கப்படும் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதை அவமதிப்பதைத் தடுக்க சட்டப்பூர்வ ஏற்பாடு ஏதுமில்லை.
எனவே, தேசியப் பாடலை பாடுவதை வேண்டுமென்றே தடுப்பதையோ அல்லது அத்தகைய பாடலைப் பாடும் கூட்டத்திற்கு இடையூறு விளைவிப்பதையோ தடை செய்யவும், அத்தகைய செயல்களைத் தண்டனைக்குரியதாக மாற்றவும், சம்பந்தப்பட்ட சட்டத்தின் பிரிவு 3ல் தேசியப் பாடலையும் அதன் வரம்புக்குள் கொண்டு வரும் வகையில் திருத்தம் செய்ய முன்மொழிப்பட்டுள்ளது” என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
