செய்திகள் கலைகள்
காலை இழந்தும் கலையை இழக்காத சத்யா: உலக அரங்கில் பிரம்மாண்டமாக ஒலிக்கவிருக்கும் மலேசிய மூத்த கலைஞரின் குரல்
கோலாலம்பூர்:
நீரிழிவு நோயின் கடுமையான பாதிப்பால் இடது காலை இழந்தபோதிலும், கலை மீதான தனது தீராத அர்ப்பணிப்பால் தொடர்ந்து முன்னேறி வருகிறார் மூத்த நடிகரும் நகைச்சுவைக் கலைஞருமான சத்யா பெரியசாமி (62).
கடந்த ஆண்டு செப்டம்பரில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட பின்னரும், அவரின் கலைப் பயணம் தடைபடவில்லை. மாறாக, தொடர்ந்து பல்வேறு படைப்புகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, KRU ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘சான் ஒராங் ஊத்தான்’ (Zan Orang Utan) எனும் பிரம்மாண்ட அனிமேஷன் திரைப்படத்தில் ‘ரோட்டி’ என்ற கதாபாத்திரத்திற்காக சத்யா குரல் வழங்கவுள்ளார். டத்தோ நோர்மன் அப்துல் ஹலீம் இயக்கும் இப்படத்தின் குரல் பதிவு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.
“உடல் வரம்புகள் இருந்தாலும், என்னை இன்னும் நம்பி வேலை வழங்குபவர்களுக்கு நான் நன்றியுள்ளவன். வீட்டில் முடங்கிக் கிடப்பதை விட கலைத்துறையில் தொடர்ந்து இயங்குவதே எனது விருப்பம்,” என சத்யா தெரிவித்துள்ளார்.
43 ஆண்டுகளுக்கும் மேலாக கலை உலகில் பயணித்துள்ள சத்யா, தனது தொழில்முறை ஒழுக்கமும் ஒத்துழைப்பும் தான் இன்றும் தயாரிப்பாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தருவதாக நம்புகிறார்.
இதுவரை இரண்டு நாடகங்களிலும் இரண்டு அனிமேஷன் திட்டங்களிலும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக அவர் கூறினார். குறிப்பாக நகைச்சுவை சார்ந்த கதாபாத்திரங்களில் நடிப்பது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், தனது உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதாகவும், Yayasan Kebajikan Artis Tanah Air (YKAT) தலைவர் டத்தோ டிஜே டேவ் வழங்கவுள்ள செயற்கைக் காலுக்காக காத்திருப்பதாகவும் சத்யா நம்பிக்கையுடன் கூறினார்.
மறுபுறம், KRU ஸ்டுடியோஸின் மூன்றாவது அனிமேஷன் படைப்பான ‘சான் ஒராங் ஊத்தான்’, உலகளவில் பிரபலமான ‘மிக்கி மவுஸ்’ போன்ற ஒரு மலேசிய அடையாளக் கதாபாத்திரத்தை உருவாக்கும் உயரிய நோக்கத்துடன் உருவாக்கப்படுவதாக டத்தோ நோர்மன் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
“உலகம் முழுவதும் அறியப்படும் ஒரு மலேசிய கதாபாத்திரத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு. ஒராங் ஊத்தான் மலேசியாவின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்று. அதனால் ‘சான் ஒராங் ஊத்தான்’ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தோம்,” என்றார் அவர்.
உள்ளூர் எல்லைகளைத் தாண்டி சர்வதேச அரங்கில் மலேசிய அனிமேஷனை உயர்த்தும் இலக்குடன் உருவாகும் இந்தத் திரைப்படம், உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
