செய்திகள் உலகம்
அமெரிக்க விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது: 8 பேர் மரணம்
லாஸ் ஏஞ்சல்ஸ்:
அமெரிக்க விமானப்படை விமானம் விபத்தில் சிக்கிய சம்பவத்தில் மொத்தம் 8 பேர் மரணமடைந்துள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் இவ்விமானம் விபத்துக்குள்ளானது.
காலை 11:20 மணியளவில் எட்வர்ட்ஸ் விமான தளத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அமெரிக்க விமானப் படையின் பி-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் ரக விமானம் விபத்துக்குள்ளானது என்று அந்தத் தளம் முகநூலில் தெரிவித்துள்ளது.
அவசரக்கால மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவத்தில் 8 பேர் மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தின.
விபத்து நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வான்வழி படங்களில், அப்பகுதி முழுவதும் கருகிப்போயிருப்பதும், விமானத்தின் சிதைந்த பாகங்கள் மிகக் குறைவாகவே தெரிவதும் பதிவாகியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
