செய்திகள் மலேசியா
புக்கிட் கியாரா குடியிருப்போர் கனவு நனவானது; 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
கடந்த 44 ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாமல் நீடித்து வந்த புக்கிட் கியாரா நீண்டகால வீட்டுவசதிப் பிரச்சனைக்கு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துரித நடவடிக்கை முற்றுப்புள்ளி வைத்திருப்பதை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வெகுவாகப் பாராட்டினார்.
தலைமுறை தலைமுறையாக இழுபறியாக இருந்த இந்த மக்கள் பிரச்சனையைத் தீர்ப்பதில் பிரதமர் காட்டிய அசைக்க முடியாத அரசியல் மனத்திடமும், நிர்வாகத் திறனும் 'மடானி' அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
எவ்விதத் தாமதமும் இன்றி, பாதிக்கப்படுபவர்களுக்கு நீதியை நிலைநாட்டும் அரசாங்கத்தின் இந்த உறுதியான அணுகுமுறை, ஏழை எளிய மக்களின் நலனே தனது முதன்மை முன்னுரிமை என்பதை மீண்டும் ஒருமுறை பறைசாற்றியிருப்பதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன், தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு புதிய வீடுகள் வீதம் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு, நகர்ப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என்று வர்ணித்தார்.
குறிப்பாக, அந்த வீட்டுவசதிப் பகுதியின் பராமரிப்பிற்காகக் கூடுதல் நிதியாக ஒரு மில்லியன் வெள்ளியைப் பிரதமர் ஒதுக்கியிருப்பது, வீடுகளைக் கட்டித் தருவதோடு மட்டுமல்லாமல், அந்த மக்களின் நீண்டகால வாழ்வின் தரத்தையும் பாதுகாப்பான சூழலையும் உறுதி செய்வதில் அரசாங்கம் கொண்டுள்ள தீர்க்கதரிசனமான அக்கறையைப் பிரதிபலிக்கிறது.
இந்த வெற்றி, அரசாங்கத்தின் வாக்குறுதிகள் வெறும் வெற்று அரசியல் முழக்கங்களாக இல்லாமல், மக்களின் கண்ணீரைத் துடைக்கும் செயல்வடிவமாக மாறியுள்ளதற்கு மிகச்சிறந்த சான்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
