செய்திகள் இந்தியா
அமெரிக்கா தாக்குதலில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு: ட்ரம்ப் போஸ்டர்களை கிழித்த ஆட்டோ ஓட்டுநர்கள்
புது டெல்லி:
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து டெல்லியில் உள்ள ட்ரம்ப் போஸ்டர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் கிழித்து ஏறிந்தனர்.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் மே மாதம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினார். இதன்படி, டெல்லி முழுவதும் சுமார் 100 ஆட்டோ ரிக்ஷாக்களில் ‘ஹேப்பி பர்த்டே அமெரிக்கா' என்ற வாசகங்கள், ட்ரம்ப் படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில், கடந்த வாரம் ஓமன் வளைகுடாவில் உள்ள ‘எம்டி செட்டபெல்லோ' என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில், 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். இதைக் கண்டிக்கும் வகையில் டெல்லி ஆட்டோ ரிக்ஷாக்களில் இடம்பெற்றிருந்த போஸ்டர்களை ஓட்டுநர்கள் கிழித்து எறிந்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
