செய்திகள் உலகம்
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து: 12 பேர் மரணம்
கன்சாஸ் சிட்டி:
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 12 பேர் மரணமடைந்தனர்.
அமெரிக்காவின் மிசோரி மாநிலம் பேட்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது.
அந்த விமானத்தில் வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் வீரர்கள் 11 பேர் உள்பட மொத்தம் 12 பேர் பயணித்தனர்.
இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்த விமானம் சில நிமிடங்களில் அப்பகுதியில் உள்ள சாலை அருகே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த விமானி உள்பட 12 பேரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
