நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டி:  36 ஆண்டுகளில் முதல்முறையாக வென்ற ஸ்காட்லாந்து

நியூ யார்க்:

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் 36 ஆண்டுகளில் முதல்முறையாக ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது, ஸ்காட்லாந்து.

இன்று (14 ஜூன்) காலை 9 மணிக்குத் தொடங்கிய ஆட்டத்தில் ஹெய்ட்டியும், ஸ்காட்லந்தும் சந்தித்தன.

28ஆவது நிமிட கோல் மூலம் ஒன்றுக்குப் பூஜ்யம் என்ற கோல்கணக்கில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றது.

ஸ்காட்லந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகுப் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இடம்பெற்றது.

அது இதற்கு முன் 1998ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றது. அப்போது அணி எந்த ஆட்டத்திலும் வெற்றி பெறவில்லை.

1990ஆம் ஆண்டில் நடந்த போட்டியில்தான் ஸ்காட்லந்து  ஓர் ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

ஹெயிட்டி 1974ஆம் ஆண்டுக்குப் பிறகு இம்முறை மீண்டும் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது.

இன்னும் சற்று நேரத்தில் நண்பகல் 12 மணிக்கு ஆஸ்திரேலியா, துருக்கியே மற்றொரு ஆட்டத்தில் சந்திக்கின்றன.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset