செய்திகள் விளையாட்டு
உலகக்கோப்பைக்காக மாற்றம் கண்ட அரங்குகள்: ஸ்பான்சர் பெயர்களை நீக்கிய ஃபிஃபா
வாஷிங்டன்:
2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு, அமெரிக்காவில் போட்டிகள் நடைபெறும் அரங்குகளின் வர்த்தகப் பெயர்களைத் தற்காலிகமாக நீக்கி, புதிய பெயர்களில் அறிவிக்க ஃபிஃபா நடவடிக்கை எடுத்துள்ளது.
"சுத்தமான அரங்கம்" (Clean Stadium Policy) என்ற கடுமையான விதிமுறையின் கீழ் இந்த மாற்றம் அமல்படுத்தப்படுகிறது.
இதனால் உலகப் புகழ்பெற்ற SoFi Stadium, MetLife Stadium, NRG Stadium போன்ற அரங்குகள், உலகக்கோப்பை காலத்தில் முறையே Los Angeles Stadium, New York New Jersey Stadium, Houston Stadium என அழைக்கப்படும். அதிகாரப்பூர்வ உலகக்கோப்பை அனுசரணையாளர்கள் அல்லாத நிறுவனங்களின் பெயர்கள், விளம்பரங்கள் அரங்குகளில் காட்சிப்படுத்தப்படுவதை ஃபிஃபா தடை செய்துள்ளது.
நூற்றுக்கணக்கான மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிட்டு அரங்குகளின் பெயரிடும் உரிமையைப் பெற்ற நிறுவனங்களுக்கு இந்த முடிவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக விளையாட்டு நிபுணர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, 2026 உலகக்கோப்பையின் அனைத்து போட்டிகளும் ஏற்கனவே இயங்கி வரும் அரங்குகளில் நடைபெறுவதால், இந்த விவகாரம் மேலும் கவனம் பெற்றுள்ளது.
ஃபிஃபாவின் விளக்கத்தின்படி, உலகக்கோப்பை காலத்தில் அரங்குகளின் அதிகாரப்பூர்வ பெயர்கள், அவை அமைந்துள்ள நகரங்களின் பெயர்களுடன் ஒருங்கிணைக்கப்படும். எனினும், கனடாவின் BC Place மட்டுமே இந்த விதிமுறையால் பாதிக்கப்படாத ஒரே அரங்காகத் திகழ்கிறது.
இதற்கிடையில், அட்லாண்டாவில் உள்ள Mercedes-Benz Stadium அரங்கின் கூரையில் அமைந்துள்ள பிரம்மாண்ட நிறுவனச் சின்னத்தை அகற்றுவது கட்டிடத்தின் அமைப்பை பாதிக்கும் என்பதால், அதனைத் தொடர்ந்து காட்சிப்படுத்த ஃபிஃபா சிறப்பு விலக்கு வழங்கியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சியாட்டிலில் உள்ள Lumen நிறுவனம், தங்களது பெயர் நீக்கப்படுவதை நகைச்சுவையாக சித்தரிக்கும் விளம்பரக் காணொலியையும் வெளியிட்டுள்ளது.
உலகக்கோப்பை மட்டுமல்லாமல், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளின்போதும் இதே "சுத்தமான அரங்கம்" கொள்கை அமல்படுத்தப்படவுள்ளது.
இதன் காரணமாக, விளையாட்டு உலகின் மிகப்பெரிய மேடைகளில் கூட வணிக அடையாளங்கள் தற்காலிகமாக மறைந்து, போட்டியின் அடையாளமே முன்னிலைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 13, 2026, 11:36 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பராகுவேவை வீழ்த்தியது அமெரிக்கா
June 13, 2026, 11:35 am
உலகக் கிண்ண கால்பந்து: கனடா-போஸ்னியா இடையிலான பரபரப்பான ஆட்டம் சமநிலையில் முடிந்தது
June 12, 2026, 11:08 pm
FIFA WC 2026: தென் கொரியாவின் அசத்தல் வெற்றி
June 12, 2026, 4:19 pm
உலக தரவரிசையில் 136வது இடத்தை எட்டிய ஹரிமாவ் மலாயா
June 12, 2026, 10:03 am
2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டி: கோலாகலமாக தொடங்கியது
June 11, 2026, 11:30 am
ஃபிஃபா உலகக்கோப்பை 2026: ஆட்டத்தின் முகத்தையே மாற்ற அமல்படுத்தப்பட்ட புதிய விதிகள்
June 11, 2026, 8:38 am
