செய்திகள் விளையாட்டு
உலக தரவரிசையில் 136வது இடத்தை எட்டிய ஹரிமாவ் மலாயா
கோலாலம்பூர்:
எந்தவொரு நட்புப் போட்டியிலும் களமிறங்காத நிலையிலும், மலேசிய தேசிய கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயா உலக தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி 136ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த முன்னேற்றம் தேசிய கால்பந்து ரசிகர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கால்பந்து சமேளனமான ஃபிஃபா வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலின்படி, மலேசியா தற்போது 1,086.22 புள்ளிகளுடன் 136வது இடத்தில் உள்ளது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்பட்ட தரவரிசையில் 138வது இடத்தில் இருந்த ஹரிமாவ் மலாயா, தற்போது இரண்டு படிகள் உயர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக, இந்திய அணி அண்மையில் நடைபெற்ற இரண்டு நட்புப் போட்டிகளில் வெற்றியைப் பெறத் தவறி, ஒரு தோல்வி, ஒரு சமநிலையை மட்டுமே பதிவு செய்தது குறிப்பிடப்படுகிறது. இதன் விளைவாக மலேசியா தரவரிசையில் முன்னேறுவதற்கான வாய்ப்பைப் பெற்றது.
இதற்கிடையில், மலேசிய கால்பந்து சங்கம் (FAM) இந்த மாதம் எந்த நட்புப் போட்டியையும் ஏற்பாடு செய்யாமல், ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) தொடர்பான முக்கிய நிர்வாக விவகாரங்கள், ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெற்ற மாநாட்டில் கவனம் செலுத்த முடிவு செய்திருந்தது.
இருப்பினும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள AFF ஹூண்டாய் கிண்ணப் போட்டியில் ஹரிமாவ் மலாயா மீண்டும் களமிறங்கவுள்ளது.
ஆசியான் நாடுகளின் தரவரிசையில், தாய்லாந்து (92) தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதனைத் தொடர்ந்து வியட்நாம் (99), இந்தோனேசியா (118), பிலிப்பைன்ஸ் (135), மலேசியா (136) இடம்பெற்றுள்ளன.
இதனால், பிராந்திய அளவில் மலேசியா மேலும் முன்னேற வேண்டிய அவசியம் இருப்பதாக கால்பந்து வட்டாரங்கள் கருதுகின்றன.
உலக அளவில், அர்ஜென்டினா முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஸ்பெயின் இரண்டாவது இடத்திலும், பிரான்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
தற்போது நடைபெற்று வரும் 2026 உலகக் கோப்பை போட்டிகளின் முடிவுகள் எதிர்கால ஃபிஃபா தரவரிசையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 12, 2026, 11:08 pm
FIFA WC 2026: தென் கொரியாவின் அசத்தல் வெற்றி
June 12, 2026, 10:03 am
2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டி: கோலாகலமாக தொடங்கியது
June 11, 2026, 11:30 am
ஃபிஃபா உலகக்கோப்பை 2026: ஆட்டத்தின் முகத்தையே மாற்ற அமல்படுத்தப்பட்ட புதிய விதிகள்
June 11, 2026, 8:38 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: போர்த்துகல், இங்கிலாந்து வெற்றி
June 11, 2026, 8:35 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: அர்ஜெண்டினா வெற்றி
June 10, 2026, 8:33 am
தீனா - பியெர்லி தான் ஜோடி உலக பூப்பந்து தரவரிசையில் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டது
June 10, 2026, 8:29 am
உலகக் கிண்ண தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை மெக்சிகோ அழுத்தத்துடன் எதிர்கொள்கிறது
June 9, 2026, 4:55 pm
