செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: முதல் ஆட்டத்தில் பிரேசில் ஏமாற்றம்
நியூஜெர்சி:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் சமநிலை கண்டு பிரேசில் அணியினர் ரசிகர்களை ஏமாற்றியுள்ளனர்.
உலகில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு தொடராக உலகக் கிண்ண
தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் குரூப் சி பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரேசில், மொராக்கோ அணிகள் மோதின.
மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் மொராக்கோ வீரர் இஸ்மாயில் சய்பரி கோல் அடித்தார்.
இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ முன்னிலை பெற்றது.
இதையடுத்து ஆட்டம் சூடுபிடித்த நிலையில் 32வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜுனியர் கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் தலா 1 கோலுடன் சமநிலை பெற்றது.
இதனை தொடர்ந்து ஆட்டத்தின் பிற்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டன.
ஆட்டத்தின் 90 நிமிடங்களும் நிறைவடைந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்ததால் கூடுதலாக 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது.
இறுதியில் பிரேசில் - மொராக்கோ ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இதையடுத்து, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பு மரியாதை
July 11, 2026, 8:29 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் திரில் வெற்றி
July 10, 2026, 9:00 am
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
July 10, 2026, 8:58 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பேவின் அதிரடி ஆட்டத்தினால் அரையிறுதியில் பிரான்ஸ்
July 9, 2026, 11:57 am
FIFA உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதல்
July 9, 2026, 10:42 am
