செய்திகள் விளையாட்டு
அனைத்துலக தரத்திலான பயிற்சிகளுடன் தயாராகும் சிலாங்கூர் கபடி அணி சுக்மா போட்டியில் 2 தங்கப்பதக்கங்களை வெல்லும்: குணராஜ் நம்பிக்கை
செந்தோசா:
அனைத்துலக தரத்திலான பயிற்சிகளுடன் தயாராகும் சிலாங்கூர் கபடி அணி சுக்மா போட்டியில் 2 தங்கப்பதக்கங்களை வெல்லும்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் அணியை தத்தெடுத்துள்ள டாக்டர் குணராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.
சுக்மா விளையாட்டு போட்டியை இவ்வாண்டு சிலாங்கூர் மாநில ஏற்று நடத்தவுள்ளது.
இப்போட்டி வரும் ஆகஸ்ட் 15 முதல் 24ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்கு சிலாங்கூர் மாநில கபடி அணி கடுமையான பயிற்சிகளுக்கு மத்தியில் தயாராகி வருகிறது.
மலேசியா கபடி சங்கத்தின் ஆதரவுடன் இப்பயிற்சியில் போட்டியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவில் இருந்து பயிற்றுநர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் சிலாங்கூர் கபடி அணியினர் சுக்மா போட்டியில் நிச்சயம் சாதிப்பார்கள்.
ஆண், பெண் என இரு பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வெல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளதாக குணராஜ் கூறினார்.
இதனிடையே சிலாங்கூரில் அதிகமான இளைஞர்கள் கபடி விளையாடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு என ஒரு பயிற்சி மையம் இல்லை.
செந்தோசாவில் அம்மையம் அமைப்பதற்கான நடவடிக்கை அடுத்தக்கட்டமாக முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பு மரியாதை
July 11, 2026, 8:29 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் திரில் வெற்றி
July 10, 2026, 9:00 am
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
July 10, 2026, 8:58 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பேவின் அதிரடி ஆட்டத்தினால் அரையிறுதியில் பிரான்ஸ்
July 9, 2026, 11:57 am
FIFA உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதல்
July 9, 2026, 10:42 am
