செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பராகுவேவை வீழ்த்தியது அமெரிக்கா
நியூயார்க்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பராகுவே அணியை வீழ்த்தி அமெரிக்கா அணி வெற்றி பெற்றது.
குரூப் டி பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் பராகுவே அணிகள் மோதின.
ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் பராகுவே வீரர் டாமியன் போபாடில்லா அடித்த சொந்த கோல் மூலம் அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது.
இதனைத் தொடர்ந்து 31-மாவது நிமிடத்தில் அமெரிக்க வீரர் போலரின் பலோகன் கோல் அடித்து அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார்.
தொடர்ந்து முதல் பாதி முடிவதற்கு முன்பாக மீண்டும் கோல் அடித்த பலோகன், அமெரிக்காவை 3-0 என்ற வலுவான முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
இரண்டாவது பாதியில் போராடியது. ஆட்டத்தின் 73ஆவது நிமிடத்தில் மௌரிசியோ கோல் அடித்து அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார்.
பிற்பாதி முடிவதற்கு முன்பாக ஜியோவானி ரெய்னா கோல் அடித்து அமெரிக்காவை 4-1 என்ற வலுவான முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
இறுதியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது உலகக் கிண்ண பயணத்தை வெற்றியுடன் தொடங்கியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பு மரியாதை
July 11, 2026, 8:29 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் திரில் வெற்றி
July 10, 2026, 9:00 am
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
July 10, 2026, 8:58 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பேவின் அதிரடி ஆட்டத்தினால் அரையிறுதியில் பிரான்ஸ்
July 9, 2026, 11:57 am
FIFA உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதல்
July 9, 2026, 10:42 am
