செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி: கால்பந்து வரலாற்றில் முதல் முறை இப்படியும் சாதனையா?
மெக்சிகோ சிட்டி:
2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டி கோலாகலமாக தொடங்கியது.
பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்தத் போட்டியின் முதல் ஆட்டத்தில் மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய தொடரின் முதல் போட்டி என்பதால் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இரு அணிகளும் களம் கண்டன.
புகழ்பெற்ற எஸ்டாடியோ அஸ்டெகா அரங்கில் நடந்த இந்தப் ஆடிய ஒன்பது வீரர்களுடன் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணியை மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இந்தத் தொடரின் தொடக்க கோலை ஜூலியன் குவினோன்ஸ் அடிக்க, அனுபவமிக்க ரவுல் ஜிமெனெஸ் இரண்டாவது கோலை அடித்தார்.
இதன்மூலம், ஏ பிரிவில் இருந்து தகுதி பெறுவதற்கான மெக்சிகோ நாட்டின் முயற்சி சுமுகமாக தொடங்கியது.
இந்தப் போட்டியில் மொத்தம் மூன்று சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டன.
இதன் காரணமாக உலகக் கிண்ண கால்பந்து போட்டி வரலாற்றில் முதல் முறையாக, தொடக்கப் போட்டியில் மூன்று சிவப்பு அட்டை வழங்கப்பட்ட போட்டியாகவும் இது மாறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2026, 10:03 am
2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டி: கோலாகலமாக தொடங்கியது
June 11, 2026, 11:30 am
ஃபிஃபா உலகக்கோப்பை 2026: ஆட்டத்தின் முகத்தையே மாற்ற அமல்படுத்தப்பட்ட புதிய விதிகள்
June 11, 2026, 8:38 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: போர்த்துகல், இங்கிலாந்து வெற்றி
June 11, 2026, 8:35 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: அர்ஜெண்டினா வெற்றி
June 10, 2026, 8:33 am
தீனா - பியெர்லி தான் ஜோடி உலக பூப்பந்து தரவரிசையில் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டது
June 10, 2026, 8:29 am
உலகக் கிண்ண தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை மெக்சிகோ அழுத்தத்துடன் எதிர்கொள்கிறது
June 9, 2026, 4:55 pm
உலகக்கோப்பையில் ‘பண பலம்’ காட்டும் பிரான்ஸ்: அர்ஜென்டினாவை மிஞ்சிய சந்தை மதிப்பு
June 9, 2026, 8:39 am
