செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து: கனடா-போஸ்னியா இடையிலான பரபரப்பான ஆட்டம் சமநிலையில் முடிந்தது
மெக்சிகோ சிட்டி:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் கனடா-போஸ்னியா இடையிலான பரபரப்பான ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
23ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடர் கடந்த 11ஆஆம் தேதி தொடங்கியது.
மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் சுற்றில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள கனடா - போஸ்னியா அணிகள் மோதின.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் போஸ்னியா வீரர் ஜோவோ லுகி கோல் அடித்தார்.
இதனால் ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் போஸ்னியா முன்னிலை வகித்தது.
இதையடுத்து, ஆட்டத்தின் பிற்பாதியில் கனடா கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டது.
அதன்படி, ஆட்டத்தின் 78ஆவது நிமிடத்தில் கனடா வீரர் செலி லரின் கோல் அடித்தார்.
இதையடுத்து ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் கோல் அடிக்க போராடின. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது.
இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
இப்போட்டி சமநிலையில் முடிந்ததால் கனடா, போஸ்னியாவுக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பு மரியாதை
July 11, 2026, 8:29 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் திரில் வெற்றி
July 10, 2026, 9:00 am
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
July 10, 2026, 8:58 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பேவின் அதிரடி ஆட்டத்தினால் அரையிறுதியில் பிரான்ஸ்
July 9, 2026, 11:57 am
FIFA உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதல்
July 9, 2026, 10:42 am
