செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ணம்: தோல்வியிலிருந்து மீண்டு வந்தது கத்தார்
கலிபோர்னியா:
உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் இருந்து கத்தார் அணியினர் தோல்வியில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.
பி பிரிவில் இடம்பெற்றிருந்த கத்தார், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கிய 17ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் பெரெல் எம்பலோ கோல் அடித்தார்.
இதையடுத்து கோல் அடிக்க கத்தார் முயற்சித்தது. அந்த முயற்சிகளை சுவிட்சர்லாந்து முறியடித்தது.
90 நிமிடங்கள் நிறைவடைந்த நிலையில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து முன்னிலை வகித்தது.
ஆட்டத்தில் 6 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.
அப்போது ஆட்டத்தின் 95வது நிமிடத்தில் கத்தார் வீரர் பவுலிம் கொஹ்கி கோல் அடித்தார்.
இதனால், 1 - 1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றது.
இதையடுத்து, இரு வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
பரபரப்பாக நடந்த கத்தார், சுவிட்சர்லாந்து ஆட்டம் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
கத்தார் இதற்கு முன்னர் 2022இல் நடந்த உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி கண்டது.
அதிலிருந்து மீண்டு வந்துள்ள கத்தாருக்குப் புதிய நம்பிக்கை கிடைத்திருக்கிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பு மரியாதை
July 11, 2026, 8:29 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் திரில் வெற்றி
July 10, 2026, 9:00 am
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
July 10, 2026, 8:58 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பேவின் அதிரடி ஆட்டத்தினால் அரையிறுதியில் பிரான்ஸ்
July 9, 2026, 11:57 am
FIFA உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதல்
July 9, 2026, 10:42 am
