செய்திகள் மலேசியா
26ஆவது வளர்தமிழ் விழா: தேசிய அளவிலான போட்டி பேராவில் நடைபெற உள்ளது
ஈப்போ:
பேரா மாநிலத்தில் நடைபெற்று வரும் 26ஆவது வளர்தமிழ் விழாவின் மாவட்ட அளவிலான போட்டிகள் வெற்றிகரமாக நேற்று நடைபெற்று முடிந்ததது.
கல்வி இலாவின் பேராதரவுடன் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் இப்போட்டியில் பேராவில் 134 தமிழ்பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்..
பேராக் மாநில த தலைமையாசிரியர் கழகத்தின் பேராதரவுடன் சிறப்புடன் நடைபெற்று வருவதாக அதன் தலைவர் ஜெயகுமார் சபாபதி தெரிவித்தார்.
ஈப்போவில் உள்ள அரசினர் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற வட கிந்தா மாவட்டத்தில் அளவில் வளர்தமிழ் விழாவில் வெறறிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கியப் பின்னர் இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினா.
பேராக் மாநிலத்தின் 12 மாவட்டங்களிலும் வளர்தமிழ் விழா அந்த மாவடங்களில் ஒரே சமயத்தில் நடைபெற்றது.
வளர்தமிழ் விழாவின் கீழ் திருக்குறள் ஒப்பித்தல், கவிதை மற்றும் பேச்சுப் போட்டி ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவதாகவும் அவர் விளக்கினார்.
மாநில அளவிலான வளர்தமிழ் விழா வரும் ஜூன் 27ஆம் தேதி மஞ்சோங் மாவட்டத்திலுள்ள மகா கணேசர் வித்தியசாலை தமிழ்ப்பள்ளியில் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதில் வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய அளவிலான வளர்தமிழ் விழாவில் பங்கேற்பார்கள்.
இவ்வாண்டுக்கான தேசிய வளர்தமிழ் விழா ஜூலை 15, 16, 17 ஆகிய தேதிகளில் பேராக் மாநிலத்தில் செலாமா லாருட் மாத்தாங் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
தேசிய அளவிலான இந்நிகழ்வை பேராக் மாநிலம் ஏற்று நடத்துவது மாநில தமிழ் கல்வித் துறைக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வளர்தமிழ் விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மாநில கல்வி இலாகா அதிகாரிகள், மாவட்ட தலைமையாசிரியர் கழகம் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இதனிடையே, ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற வட கிந்தா மாவட்ட வளர்தமிழ் விழாவின் ஒட்டுமொத்த வெற்றியாளராக சென் பிலோமினா தமிழ்ப்பள்ளி முதல் நிலையிலும் , இரண்டாவது நிலையில் கிளேபாங தமிழ்ப்பள்ளி, மூன்றாவது நிலையில். மகிழம்பூ தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியர்களுக்கும், ஊக்கமளித்த தலைமையாசிரியர்களுக்கும், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினருக்கும், பள்ளி நிர்வாகத்தினருக்கும் மற்றும் முன்னாள் மாணவர் அமைப்புகளுக்கும் ஜெகுமார் சபாபதி தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 8:50 pm
ரோன் 95, ரோன் 97 பெட்ரோல்களின் விலைகள் 25 சென் குறைந்தது
June 24, 2026, 8:47 pm
ஜொகூரில் தேசிய முன்னணி ஆட்சி தொடர்ந்தால் கூட்டணி அரசாங்கம் அமையாது: ஓன் ஹபிஸ்
June 24, 2026, 6:46 pm
ஜொகூர் தேர்தலில் மஇகா 4 தொகுதிகளில் போட்டி: ரவீன்குமார் கெமெலே தொகுதியில் களமிறங்குகிறார்
June 24, 2026, 4:18 pm
கட்டுமானச் செலவு உயர்வையும் மீறி NPE 2 திட்டம் பாதிக்கப்படாது: IJM நம்பிக்கை
June 24, 2026, 3:31 pm
