நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வயது வரம்புகளைப் பூர்த்தி செய்யத் தவறினால் சமூக ஊடக சேவை வழங்குநர்களுக்கு 10 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

வயது வரம்புகளைப் பூர்த்தி செய்யத் தவறினால் சமூக ஊடக சேவை வழங்குநர்களுக்கு  10 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தகவல் தொடர்பு அமைச்சர்  ஃபஹ்மி ஃபட்சில் மக்களவையில் கூறினார்.

இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025 (சட்டம் 866)-இன் கீழ் பயனர் வயது சரிபார்ப்புத் தேவைகளை சமூக ஊடகத் தளங்கள் பூர்த்தி செய்ய வேண்டியவை.

அப்படி தவறும் சமூக ஊடக சேவை வழங்குநர்களுக்கு 10 மில்லியன் ரிங்கிட் வரை நிதி அபராதங்களைச் சந்திக்க நேரிடும்.

சட்டம் 866-இன் பகுதி III-இன் கீழ் உள்ள தனது கடமைகளை எந்தவொரு செயலி சேவை வழங்குநரும் நிறைவேற்றத் தவறினால், எம்சிஎம்சி இணங்காததற்கான அறிவிப்பை வெளியிடக்கூடும். 

வயது சரிபார்ப்பில் சமூக ஊடக நிறுவனங்கள் இணங்குவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள், விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷஹ்ரெட்ஸான் ஜோஹான்  எழுப்பிய துணைக் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset