செய்திகள் மலேசியா
ஜொகூரில் தொகுதிப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து பெர்லிங் தொகுதியை மஇகா குறிவைக்கிறது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
ஜொகூர்பாரு:
வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில், தனது தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகளுடனான ஒரு தொகுதிப் பரிமாற்றமாக மஇகா பெர்லிங் தொகுதியில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய முன்னணியில் உள்ள மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தியதைத் தொடர்ந்து, போட்டியிடுவதற்கான ஒரு புதிய தொகுதியாக பெர்லிங்கைத் தனது கட்சி கருதுவதாக மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கூறினார்.
கடந்த மாநிலத் தேர்தலில் மஇகா நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது.
இந்த முறை, நாங்கள் பரிசீலிக்கும் புதிய தொகுதிகளில் பெர்லிங்கும் ஒன்றாகும்.
அதே சமயம், மாற்றப்படவுள்ள எங்களின் தற்போதைய தொகுதியான தெங்கரோவும் இதில் அடங்கும்.
ஜொகூரில் இன்று மஇகாவின் மாநிலத் தேர்தல் கேந்திரத்தைத் தொடங்கி வைத்த பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக 2022இல் நடைபெற்ற 15ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலில், மஇகா கெமெலே, கஹாங், தெங்காரோ, புக்கிட் பத்து ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு மூன்றில் வெற்றி பெற்றது.
ரவீன் குமார் தெங்கரோ தொகுதியில் வெற்றி பெற்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்,
என். சரஸ்வதி கெமெலே தொகுதியிலும், ஆர். வித்யானந்தன் கஹாங் தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.
அதே சமயம், எஸ். சுப்பையா புக்கிட் பத்து தொகுதியில் தோல்வியடைந்தார்.
கடந்த மாநிலத் தேர்தலில் மசீச கட்சி பெர்லிங் மாநிலத் தொகுதியில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
