செய்திகள் மலேசியா
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் கால்பந்து போட்டியில் சுங்கை ரெங்கம், தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின
சுங்கைபூலோ:
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் கால்பந்து போட்டியில் சுங்கை ரெங்கம், தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடின.
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் 22ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இவ்வாண்டுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 65 அணிகளும் பெண்கள் பிரிவில் 34 அணிகளும் களமிறங்கியுள்ளன.
ஆக மொத்தத்தில் 90 அணிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தின.
பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற இப்போட்டியின் ஆண்கள் பிரிவில் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி முதல் நிலையில் வெற்றி பெற்றன.
வெற்றி பெற்ற இப்பள்ளிக்கு நமச்சிவாயம் கிண்ணமும் 2 ஆயிரம் ரிங்கிட் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.
பத்துகேவ்ஸ், சுங்கை சோ, துவான் மி ஆகிய தமிழ்ப்பள்ளிகள் அடுத்தடுத்த நிலையில் வெற்றி பெற்றன.
பெண்கள் பிரிவில் தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் நிலையில் வெற்றி பெற்றன.
வெற்றி அவ்வணியினருக்கு ரவீந்திரன் சுழற்கிண்ணமும் 2 ஆயிரம் ரிங்கிட் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.
காஜாங், ரிஞ்சிங் ஆகிய பள்ளிகள் அடுத்தடுத்த நிலையில் வெற்றி பெற்றன.
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பல பிரமுகர்கள் பரிசுகளை எடுத்து வழங்கினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
