செய்திகள் மலேசியா
வவாசான் நெகாரா எனும் புதிய அரசியல் கட்சியை டத்தோஸ்ரீ ஹம்சா அறிவித்தார்
தானா மேரா:
ரீசெட் இயக்கத்தின் நிறுவனர், டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின், வவாசான் நெகாரா எனும் புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அடுத்த வாரம் இக்கட்சியின் முதல் வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெறும்.
மேலும் இக்கட்சியின் பெயரை பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் வழங்கினார்.
கெரக்கான் ரீசெட் எந்தக் கட்சி என்று பலர் கேட்கிறார்கள். இன்று நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், இந்தக் கட்சிக்கு பாஸ் தலைவரால் 'பார்ட்டி வவாசன் நெகாரா' என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.
எங்கள் கட்சி இப்போதுதான் பிறந்துள்ளது. எங்கள் தந்தை டான் ஸ்ரீ அப்து ஹாடி அவாங் அதை கவனித்துக் கொள்கிறார்.
நாங்கள் பாஸ், கெரக்கான், நண்பர்களுடன் ஒன்றிணைய விரும்புகிறோம்.
மக்கள், நாட்டின் எதிர்கால செயல்திட்டங்களுக்காக, மேலும் விரிவான அரசியல் புரிதலையும் ஒத்துழைப்பையும் உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
இன்று இங்கு டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கால் தொடங்கி வைக்கப்பட்ட ரீசெட் மாநாட்டில் அவர் தனது உரையில் இவ்வாறு கூறினார்.
தேசியக் கூட்டணி தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சம்சுரி மொக்தார், கெரக்கான் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ், மந்திரி பெசார் டத்தோ முகமது நசுருதீன் தாவூத் ஆகியோரும் உடனிருந்தனர்.
ரீசெட் மாநாட்டில் சுமார் 20,000 கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
