செய்திகள் இந்தியா
நிபா வைரஸ் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தல்
சென்னை:
நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக 3 நாட்கள் காய்ச்சல், தலைவலி, வாந்தி இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும் என்று பொது சுகாதார துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவருக்கு. மருத்துவ குழுவினர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல. அவருடன் தொடர்புடைய 3 பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கோரி மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு, பொது சுகாதார துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
நிபா வைரஸ், விலங்குகள் மூலம் பரவும் ஒரு நோய் தொற்று.
எனவே எவருக்கேனும் தொடர்ச்சியாக 3 நாட்கள் காய்ச்சல், தலைவலி, வாந்தி உள்ளிட்டவை இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும்.
நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களை, மருத்துவனையில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். எல்லையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
