நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒருதலைப்பட்சமான மதமாற்றச் சட்டத்தை எதிர்ப்பதில் இந்திரா காந்தி உட்பட மேலும் 13 பேர் தோல்வியுற்றனர்

கோலாலம்பூர்:

குழந்தைகளை ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றுவதற்கு அனுமதிக்கும் பல்வேறு மாநில இஸ்லாமியச் சட்டங்களின் விதிகளை எதிர்த்து எம். இந்திரா காந்தி, மேலும் 13 நபர்கள் தாக்கல் செய்திருந்த மூல மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கைத் தொடர மனுதாரர் தகுதிநிலையை நிரூபிக்கத் தவறிவிட்டார் என்று நீதிபதி அலிசா சுலைமான் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கைத் தொடர்வதற்கான
தகுதிநிலையின் அடிப்படைத் தேவையை மனுதாரர் பூர்த்தி செய்யத் தவறிவிட்டார் என்று நான் கண்டறிந்து தீர்ப்பளிக்கிறேன் என்று அலிசா கூறினார்.

மார்ச் 2023இல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், பெர்லிஸ், கெடா, மலாக்கா, நெகிரி செம்பிலான், பேரா, ஜொகூர், கூட்டாட்சிப் பிரதேசம் ஆகியவை பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளன.

கூட்டரசு அரசியலமைப்பின் 12(4) மற்றும் 75-வது பிரிவுகளுக்கு முரணாக இருப்பதால், குழந்தைகளை ஒருதலைப்பட்சமாக இஸ்லாமிற்கு மதம் மாற்றுவதை அனுமதிக்கும் மாநிலத்தின் விதிமுறை செல்லாது என அறிவிக்கக் கோரி மனுதாரர் வழக்குத் தொடுத்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset