செய்திகள் மலேசியா
கோலாலம்பூர் பள்ளிகளில் கூடுதல் போக்குவரத்து அதிகாரிகளை போலிஸ் பணியில் அமர்த்தியுள்ளது
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் பள்ளிகளில் கூடுதல் போக்குவரத்து அதிகாரிகளை போலிஸ் பணியில் அமர்த்தியுள்ளது.
கோலாலம்பூர் போலிஸ் தலைவர் ஃபாடில் மார்சஸ் இதனை கூறினார்.
மாணவர்கள் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கும், விபத்துகளின் அபாயத்தைக் குறைப்பதற்கும்,
தலைநகரம் முழுவதும் உள்ள 122 அரசு, தனியார் இடைநிலைப் பள்ளிகளுக்குக் போலிஸ் கூடுதல் போக்குவரத்து அதிகாரிகளை நியமிக்க உள்ளது.
பணியில் ஈடுபடும் அதிகாரிகள், போக்குவரத்து சீராகச் செல்லவும், மாணவர்களின் மோட்டார் சைக்கிள்களைத் தவறாமல் ஆய்வு செய்யவும் உதவுவார்கள்.
மேலும், மோட்டார் சைக்கிள் ஓட்டும் மாணவர்களிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமங்கள் உள்ளதா என்பதை உறுதிசெய்ய, அவர்கள் அந்த உரிமங்களையும் சரிபார்ப்பார்கள்.
மாணவர்கள் சரிக்கும் தவறுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அலம் டாமாய் இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2026, 12:47 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல் ஜூலை 11, நெகிரி செம்பிலான் ஆகஸ்ட் 1இல் நடைபெறும்: தேர்தல் ஆணையம்
June 12, 2026, 12:45 pm
பாஸ் அல்லது பெர்சத்துவை வெளியேற்றுவது; கெரக்கான், எம்ஐபிபியின் கையில் உள்ளது: ஹாடி அவாங்
June 12, 2026, 10:13 am
