நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

என் பெயர் நிரபராதி என நிரூபிக்கப்பட்டுள்ளது: ரோஸ்மாவுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்ற லெபனான் நகை வியாபாரி மகிழ்ச்சி

கோலாலம்பூர்:

ஆடம்பர நகைகள் தொடர்பான ஒரு தகராறில், டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் 67.5 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, குளோபல் ரோயல்டி டிரேடிங்  நிறுவனத்தின் நிறுவனர் சமேர் ஹலிம், தான் நிம்மதியடைந்ததாகவும், தன் மீதான குற்றச்சாட்டுகள் சரியென நிரூபிக்கப்பட்டதாக கூறினார்.

இந்தத் தீர்ப்பை எட்டு ஆண்டு கால சட்டப் போராட்டத்தின் உச்சக்கட்டம் என்று விவரித்த, லெபனானில் பிறந்த 51 வயதான அந்த தொழிலதிபர், இந்தத் தீர்ப்பு மலேசிய நீதித்துறையின் மீதான தனது நம்பிக்கையை வலுப்படுத்தியதாகக் கூறினார்.

இந்தத் தீர்ப்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மலேசிய நீதிமன்றங்கள் தங்களின் சுதந்திரத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன.

தீர்ப்பு மிகவும் தெளிவாக உள்ளது. என் மீதான பழி நீங்கியதாக நான் உணர்கிறேன் என்று அவர் கூறினார்.

வழக்கு விசாரணை செயல்முறை முழுவதும், தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கைகள் பொய்யானவை என்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தனது தனிப்பட்ட நம்பகத்தன்மை மீதான தாக்குதல்கள் உட்பட, தனது நிறுவனம் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டதாக சமேர் கூறினார்.

நிறுவனமும் எங்கள் கோரிக்கைகளும் பொய்யானவை என்று கூறி, சில தரப்பினர் சமூக ஊடகங்களில் மேற்கொண்ட எதிர்மறைப் பிரச்சாரங்கள் உள்ளிட்ட பல்வேறு தடைகளுடன், இந்த முடிவை எட்டுவதற்கு எட்டு ஆண்டுகள் ஆனது.

எனது நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் முயற்சிகளும் இருந்தன.

எனவே, இறுதியாக என் பெயர் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நான் உணர்கிறேன் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset