நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாஸ் அல்லது பெர்சத்துவை வெளியேற்றுவது; கெரக்கான், எம்ஐபிபியின் கையில் உள்ளது: ஹாடி அவாங்

மாராங்:

தேசியக் கூட்டணியில் இருந்து எந்தவொரு கட்சியையும் வெளியேற்றுவது பெரும்பான்மை வாக்கெடுப்பின் முடிவைப் பொறுத்தது.

பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ ஹாடி அவாங் இதனை கூறினார்.

இரு கட்சிகளும் தங்களது அரசியல் ஒத்துழைப்பை முடித்துக் கொண்டதால், தேசியக் கூட்டணியில் பாஸ் அல்லது பெர்சத்து நீடிப்பதை ஆதரிப்பதா வேண்டாமா என்பது கெரக்கான் அல்லது மலேசிய இந்திய மக்கள் கட்சியின் முடிவாகும்.

மேலும் இது மற்ற கூட்டணிக் கட்சிகளின் கையில் உள்ளது.

தேசியக் கூட்டணியின் சட்ட விதியின் படி கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள்தான் இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று மாராங்கில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

இதற்கிடையில், எந்தவித அரசியல் ஒத்துழைப்பும் இல்லாதபோதிலும் கூட்டணியில் தொடர்ந்து இருக்கும் பாஸ், பெர்சத்து கட்சிகளுக்கு இடையேயான குழப்பம் குறித்து கருத்து தெரிவித்த ஹாடி, தலைமைப் பதவியை பாஸ் கட்சி வகிக்கிறது.

டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் தலைமையிலான கட்சி இன்னும் ஒரு அங்கத்துவ உறுப்பினராகவே உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset