செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத் தேர்தல் ஜூலை 11, நெகிரி செம்பிலான் ஆகஸ்ட் 1இல் நடைபெறும்: தேர்தல் ஆணையம்
புத்ராஜெயா:
ஜொகூர் மாநிலத் தேர்தல் ஜூலை 11ஆம் தேதி அன்றும், நெகிரி செம்பிலானில் வாக்குப்பதிவு ஆகஸ்ட் 1ஆம் தேதியும் நடைபெறும்.
தேசிய தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹரூண் இதனை அறிவித்தார்.
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களின் விவகாரங்களைத் தீர்மானிப்பதற்கான ஒரு சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.
இங்குள்ள தேர்தல் ஆணையக் கோபுரத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹரூண் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்திற்கு பின் ஜொகூர் மாநிலத் தேர்தல் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.
ஜொகூரில் வேட்புமனுத் தாக்கல் நாள் ஜூன் 27ஆம் தேதியாகவும், முன்கூட்டியே வாக்களிப்பவர்கள் ஜூலை 7-ஆம் தேதியும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வார்கள்.
இதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும்.
நெகிரி செம்பிலானில் வேட்புமனுத் தாக்கல் ஜூலை 18ஆம் தேதியும், முன்கூட்டியே வாக்களிப்பது ஜூலை 28ஆம் தேதியும் நடைபெறவுள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக முறையே ஜூன் 1, 5 ஆகிய தேதிகளில் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2026, 5:52 pm
கோலாலம்பூர் பள்ளிகளில் கூடுதல் போக்குவரத்து அதிகாரிகளை போலிஸ் பணியில் அமர்த்தியுள்ளது
June 12, 2026, 12:45 pm
பாஸ் அல்லது பெர்சத்துவை வெளியேற்றுவது; கெரக்கான், எம்ஐபிபியின் கையில் உள்ளது: ஹாடி அவாங்
June 12, 2026, 10:13 am
