நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டத்தை மதிக்கவும், இல்லையெனில் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்: ரோஹின்யா மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

கோலாலம்பூர்:

நாட்டில் உள்ள ரோஹின்யா சமூகத்தினர் சட்டங்களையும் விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

எந்தவொரு விதிமீறலிலும் அரசாங்கம் சமரசம் செய்து கொள்ளாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அகதிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும் முயற்சிகள் இன்னும் பல்வேறு தடைகளைச் சந்தித்து வருவதால், ரோஹிங்கியா பிரச்சினையை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.

எனவே, மியன்மார் மக்களுக்கும், குறிப்பாக ரோஹிங்கியாக்களுக்கும் ஒரு அறிவுரை, அவர்களும் நமது நாட்டின் விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

அவர்களுடைய கட்டிடங்களும், வணிக நிறுவனங்களும் விதிகளைப் பின்பற்ற வேண்டும். மீறினால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.

செந்துல் பசாரில் உள்ள அல்-ஹிதாயா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துச் சந்தித்தபோது அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset