செய்திகள் மலேசியா
80 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோப்பெங் தமிழ்ப்பள்ளி 14.5 மில்லியன் ரிங்கிட் செலவில் எழுச்சி பெறவுள்ளது: தலைமையாசிரியை லோகேஸ்வரி
கோப்பெங்:
பேரா, கோப்பெங்கில் உள்ள தமிழ்ப்பள்ளிக் கூடம் வெகு விரைவில் 14.5 மில்லியன் ரிங்கிட் செலவில் புதுப்பொலிவுடன் எழுச்சி காணவுள்ளது.
அப்பள்ளியின் தலைமையாசிரியை லோகேஸ்வரி ஆறுமுகம் இதனை தெரிவித்தார்.
80 ஆண்டுகள் பழமையான இப்பள்ளிக் கூடத்தின் முக்கிய வகுப்பறை, நிர்வாக கட்டிடங்கள் கரையான் அரிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டு பள்ளியின் முக்கிய கட்டிடம் கடுமையாக சேதமடைந்த கட்டமைப்பு என வகைப்படுத்தப்பட்டு, மிகவும் ஆபத்தான கட்டிடங்கள் பட்டியலில் வைக்கப்பட்டது.
கரையான் சேதத்தை தீர்க மத்திய அரசு புதிய கட்டிடம் கட்ட 14.5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
பழைய கட்டிடங்களை இடித்து புதிய 3 மாடி கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
புதிய கட்டிடத்தில் 6 வகுப்பறைகள், நிர்வாக அலுவலகம், ஆசிரியர் அறை, விளையாட்டு சேமிப்பு அறை, ஆர்பிடி அறை, அறிவியல் ஆய்வகம், ஆலோசனை அறை ஆகிய வசதிகள் அமைக்கப்படவுள்ளன.
துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ அண்மையில் இப்பள்ளிக்கு வருகை தந்து, 2026ஆம் ஆண்டு கட்டுமானம் தொடங்கப்பட்டு, கட்டி முடிக்க 22 மாதங்கள் ஆகும் என தெரிவித்தார்.
கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கார் ஹிங் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இந்த ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கோப்பெங் இந்திய மகளிர் மேம்பாட்டு இயக்கம் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கான சீருடை, வழங்கும் நிகழ்சி இன்று பள்ளி வளாகத்தில. சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்சியில் பேசிய தலைமையாசிரியை லோகேஸ்வரி ஆறுமுகம், கோப்பெங் இந்திய மகளிர் மேம்பாட்டு இயக்கம் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாக கூறினார்.
தற்போது பள்ளியில் 119 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அதில் தொடக்க நிலை 53 மாணவர்களுக்கு சீருடை மற்றும் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கல்வியுடன் இணைந்து ட்ரோன் மற்றும் ரோபோட்டிக்ஸ் பயிற்சி, கராத்தே, கலைக்கல்வி, யோகா போன்ற இணைப்பாட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
மலாய் மற்றும் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த கூடுதல் வகுப்புகள் வெளிப்புற ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன.
பல ஆண்டுகளாக கரையான் சேதத்தால் பாதிக்கப்பட்டிருந்த இப்பள்ளிக்கு இப்போது நிரந்தர தீர்வு கிடைக்க உள்ளது. சகல வசதிகள் கொண்ட பள்ளியாக திகழ்ந்து அதிக மாணவர்கள் பயிலும் வாய்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை தலைமையாசிரியை வெளியிட்டார்.
கோப்பெங் தமிழ்பள்ளியை பெற்றோர்கள் தங்கள் முதல் தேர்வாக கருதி மாணவர் சேர்கையை அதிகரிக்க முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
கோப்பெங் இந்திய மகளிர் மேம்பாட்டு இயக்கம் 15ஆவது ஆண்டாக மாணவர்களுக்கு சீருடை வழங்கியது
கோப்பெங் இந்திய மகளிர் மேம்பாட்டு இயக்கம், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான சீருடை வழங்கும் சமூகநலத் திட்டத்தை தொடர்ந்து 15ஆவது ஆண்டாக முன்னெடுத்துள்ளது.
இயக்கத்தின் ஆலோசகரும் முன்னாள் தலைவியுமான பழனியம்மாள் பெரியசாமி , பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் சீருடைகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
“கடந்த 15 ஆண்டுகளாக இந்தப் பள்ளிக்கு சீருடைகள் வழங்கி வருகிறோம். இந்த ஆண்டும் பள்ளித் தலைமையாசிரியரின் வேண்டுகோளின் பேரில் மாணவர்களுக்குத் தேவையான சீருடைகளை வழங்கியுள்ளோம். இது எங்கள் இயக்கத்தின் தொடர்ச்சியான சமூகப் பணிகளில் ஒன்றாகும், என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2026, 5:52 pm
கோலாலம்பூர் பள்ளிகளில் கூடுதல் போக்குவரத்து அதிகாரிகளை போலிஸ் பணியில் அமர்த்தியுள்ளது
June 12, 2026, 12:47 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல் ஜூலை 11, நெகிரி செம்பிலான் ஆகஸ்ட் 1இல் நடைபெறும்: தேர்தல் ஆணையம்
June 12, 2026, 12:45 pm
பாஸ் அல்லது பெர்சத்துவை வெளியேற்றுவது; கெரக்கான், எம்ஐபிபியின் கையில் உள்ளது: ஹாடி அவாங்
June 12, 2026, 10:13 am
