நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் கால்பந்துப் போட்டி; மொத்தம் 90 தமிழ்ப்பள்ளி அணிகள் களமிறங்கவுள்ளன: பத்துமலை

பெட்டாலிங் ஜெயா:

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் கால்பந்துப் போட்டியில் மொத்தம் 90 தமிழ்ப்பள்ளி அணிகள் களமிறங்கவுள்ளன.

அச்சங்கத்தின் தலைவர் பத்துமலை இதனை கூறினார்.

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தினர் 22ஆம் ஆண்டாக சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர்.

இக்கால்பந்து போட்டி நாளை ஜூன் 13ஆம் தேதி சுங்கைபூலோ ஆர்ஆர்ஐ திடலில் நடைபெறவுள்ளது.

இவ்வாண்டுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 65 அணிகள் களமிறங்கவுள்ளனர்.

அதே போன்று பெண்கள் பிரிவில் 34 அணிகளும் களமிறங்கவுள்ளன.

ஆக மொத்தத்தில் 90 அணிகள் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளன.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இப்போட்டி ஒவ்வோர் ஆண்டும் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கால்பந்து போட்டியில் ஆணகள், பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுக்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்துக் கொண்டிருக்கிறது.

இதே போன்று தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் அமரர் நமச்சிவாயம் கிண்ணம் என்ற பெயரில் ஆண்களுக்கான போட்டி நடத்தப்படவுள்ளது.

பெண்கள் பிரிவுக்கான போட்டி முன்னாள் தலைவர் அமரர் ரவீந்திரன் கிண்ணம் என்ற பெயரில் நடத்தப்படுகிறது என்ற அவர் கூறினார்.

பெட்டாலிங் சங்கத்தின் துணை தலைவர் குணசேகரன், செயலாளர் குணசேகரன், பொருளாளர் இராமச்சந்திரன் உட்பட அனைத்து பொறுப்பாளர்களின் முயற்சியில் இப்போட்டி நாளை நடைபெறவுள்ளது.

ஆக மக்கள் திரளாக வந்து இப்போட்டிக்கு ஆதரவு தருமாறு பத்துமலை கூறினார். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset