செய்திகள் உலகம்
உலகக்கோப்பை தொடக்க விழாவை குலைத்த போராட்டம்: மெக்சிகோ அரங்கம் வெளியே போலிஸ்–ஆர்ப்பாட்டக்காரர்கள் கடும் மோதல்
மெக்சிகோ நகரம்:
உலகின் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டம் உற்சாகமாக அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில், மெக்சிகோவின் புகழ்பெற்ற எஸ்டாடியோ அஸ்டெக்கா அரங்கத்தின் வெளியே பரபரப்பான போராட்டம் வெடித்தது. 80,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய நிலையில், ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் போலிஸாருடன் நேரடியாக மோதலில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள், காணாமல் போனதாகக் கூறப்படும் மெக்சிகோ குடிமக்களின் குடும்பத்தினர், மாணவர் இயக்க செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி அதிகாலை முதலே அரங்கத்தைச் சுற்றிய பகுதிகளில் திரண்டனர். அரசின் கொள்கைகளுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
போட்டியின் முதல் கோலை மெக்சிகோ அணி பதிவு செய்த சில நிமிடங்களிலேயே, சில ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்புத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு அரங்கப் பகுதியை நோக்கி முன்னேறினர். இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான கைகலப்பு ஏற்பட்டது. சம்பவ இடம் சில நொடிகளில் பதற்றக் களமாக மாறியது.
மேலும், சில இளைஞர்கள் மரக் கம்பிகளைப் பயன்படுத்தி வாகனங்களின் கண்ணாடிகளைச் சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்கடங்காத சூழலுக்குச் சென்றதைத் தொடர்ந்து, போலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதுடன், குதிரைப்படையினரையும் களமிறக்கி கூட்டத்தைக் கலைத்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.
கடந்த சில வாரங்களாகவே சிறந்த பணிச்சூழல், வேலை நிபந்தனைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் மெக்சிகோ அரசுக்கு தலைவலியாக இருந்து வருகின்றன. இந்தப் போராட்டங்கள் உலகக்கோப்பை தொடர்பான நிகழ்வுகளையும் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் முன்பே எழுந்திருந்தது.
குறிப்பாக, தலைநகர் மெக்சிகோ நகரின் பிரபலமான ஜொகாலோ (Zocalo) பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ உலகக்கோப்பை ரசிகர் மண்டலத்தின் செயல்பாடுகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இருப்பினும், ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் இரும்புத் தடுப்புகளைத் தள்ளி நெரிசலுடன் உள்ளே நுழைந்ததால், போட்டி தொடங்குவதற்கு முன்பே அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும் குழப்பமும் நிலவியது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 7:53 pm
டொராண்டோ சல்சா திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
July 12, 2026, 11:53 am
அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும்: ஈரான்
July 11, 2026, 6:55 pm
பெருவில் பிறந்த 500 குழந்தைகளுக்கு "எர்லிங் ஹாலண்ட்" பெயர் சூட்டப்பட்டுள்ளது
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
