செய்திகள் உலகம்
தென்கொரியாவில் நடந்த சண்டையில் மலேசிய நாட்டவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணம்
சியோல்-
தென்கொரியாவில் நிகழ்ந்த சண்டை ஒன்றில் மலேசிய நாட்டவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கத்திக்குத்து நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு மலேசிய நாட்டவரும் தென்கொரியா காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
வடக்கு சுங்சியோங் மாகாணத்தின் யும்சியோங்கில் இந்த சண்டை நிகழ்ந்ததாக அங்குள்ள உள்ளூர் செய்தி ஊடகங்கள் தகவலை தெரிவித்தன.
20 வயதுடைய மலேசியரை கத்தியால் குத்திய நிலையில் அவர் கடுமையான காயங்களுக்கு இலக்கானார்
பாதிக்கப்பட்டவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபர் அருகிலுள்ள குடியிருப்புக்குத் தப்பிச் சென்றதாகவும், ஆனால் சுமார் ஒரு மணி நேரம் கழித்து கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சண்டைக்கான காரணத்தைக் கண்டறிய காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
