செய்திகள் உலகம்
செங்கடலில் 2 சவூதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி போராட்டவாதிகள் தாக்குதல்
ரியாத்:
செங்கடலில் 2 சவூதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி போராட்டவாதிகள் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினா்.
யேமன் மீதான சவூதி அரேபியாவின் கடல்வழி முற்றுகை, யேமனின் சனா சா்வதேச விமான நிலையம் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக பாப் எல் மண்டேப் நீரிணை வழியாக செல்லும் சவூதி தொடா்புடைய கப்பல்களுக்கு எதிராக ஹூதி போராட்டவாதிகள் கடல்வழி முற்றுகையை கடந்த திங்கள்கிழமை அறிவித்தனா்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு முதல்முறையாக, சவூதி அரேபியாவின் எண்ணெய்யுடன் செங்கடலில் சென்று கொண்டிருந்த ‘என்செலியா’, ‘லேலா’ ஆகிய 2 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 2 கப்பல்களும் தீப்பிடித்ததாகவும் ஹூதிக்களின் ‘சபா’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஹூதிக்களுக்கு எச்சரிக்கை விடுத்து அமெரிக்க அதிபா் டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘கப்பல்கள் மீது ஹூதிக்கள் மீண்டும் தாக்கினால், அதற்கான பொறுப்பை ஈரான் ஏற்க வேண்டியிருக்கும். ஈரானின் பிரதிநிதிகளாக ஹூதிக்கள் செயல்படுகின்றனா். எனவே, ஈரான், ஹூதிக்கள் ஆகிய இருவா் மீதும் கடும் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ எனக் குறிப்பிட்டாா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
